தேசிய செய்திகள்

பிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம் + "||" + Narendra Modi to visit Thailand from 2 to 4 November for ASEAN-India, East Asia and RCEP summits

பிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்

பிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்
ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகின்ற நவம்பர் மாதம் 2-ம் தேதி தாய்லாந்து செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி சவுதி அரேபிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று நாடு திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா - சவுதி அரேபியா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில் , தாய்லாந்தில் நடைபெற உள்ள 3 முக்கிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகின்ற நவம்பர் மாதம் 2-ம் தேதி தாய்லாந்து செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.

இதனையடுத்து செயலாளர் (கிழக்கு) விஜய் தாகூர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவிடம் இருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அங்கு நடைபெற உள்ள, 16-வது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்)- இந்தியா மாநாடு, 14-வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3-வது பிராந்திய விரிவான கூட்டுப் பொருளாதார உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நவம்பர் 2-ம் தேதி முதல் 4 ம் தேதி வரை பிரதமர் மோடி தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவு அதிபர்
மாலத்தீவைச் சேர்ந்த 7 பேரை சீனாவில் இருந்து அழைத்து வந்ததற்காக மாலத்தீவு அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2. மராட்டியம், அரியானாவில் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி -பிரதமர் மோடி
இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா மற்றும் அரியானா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்க பயணம்: பல தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பு - பிரதமர் நரேந்திர மோடி டுவீட்
அமெரிக்காவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் பல தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
4. பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.