தேசிய செய்திகள்

வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு ; காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Modi govt caught snooping: Congress corners govt as WhatsApp spygate row explodes

வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு ; காங்கிரஸ் குற்றச்சாட்டு

வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு ; காங்கிரஸ் குற்றச்சாட்டு
வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,

பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் நேற்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. உலகம் முழுவதும் பலரது ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறியது.

ஆனால், இந்தியாவில் எத்தனை பேர் உளவு பார்க்கப்பட்டனர் என்ற விவரத்தை ‘வாட்ஸ்-அப்’ தெரிவிக்கவில்லை. யாருடைய உத்தரவின்பேரில், உலகம் முழுவதும் உளவு பார்க்கப்பட்டது என்ற விவரத்தையும் கூறவில்லை. பயனாளர்களின் அடிப்படை அந்தரங்க உரிமைகளை பாதுகாக்க ‘வாட்ஸ்-அப்’ உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைவர் வில் கேத்கார்ட் தெரிவித்துள்ளார். உளவு விவகாரத்தை விசாரிக்க ‘வாட்ஸ்- அப்’புக்கு டொரண்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள சிட்டிசன் ஆய்வுக்கூடம் உதவி செய்துள்ளது.

இந்நிலையில், உளவு மென்பொருளை உருவாக்கியதாக கூறப்படும் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதற்கிடையே, இந்த உளவு விவகாரம், இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திடம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கிடையே,  செல்போன் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சில அமைப்புகள் உளவு பார்க்கும் மென்பொருளை உருவாக்கி அதை உலவ விட்டு தகவல்களை உளவு பார்த்து வருவதாகவும் சுர்ஜேவாலா தெரிவித்தார். தனி நபர் தகவல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் உரிமையாக உள்ள நிலையில் அதை மீறும் வகையில் பாஜக அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர் மத்திய அரசை விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை - ராமர் கோவில் பணிகள் ஏப்ரலில் தொடங்க வாய்ப்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது
தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என்று சிவசேனா பயப்படுகிறது என மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறியுள்ளார்.
3. வாட்ஸ் அப் சர்ச்சை: நவ.20-ல் சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற குழு விசாரணை
வாட்ஸ் அப் மூலம் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
4. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேச்சு
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. மராட்டிய காங்.தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், சோனியா காந்தியை மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளனர்.