மாநில செய்திகள்

அரசு மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் + "||" + Govermetnt Doctors Strikes ends today

அரசு மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

அரசு மருத்துவர்களின்  போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நீடித்து வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
சென்னை,

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந்தேதி முதல் உண்ணாவிரதம், வேலைநிறுத்த போராட்டம் நடந்து  வந்தது.  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், சங்கத்தினரை அரசு அழைத்து பேசும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அரசு ‘அங்கீகாரம் பெற்ற சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்’ என கோரிக்கை விடுத்தது.

நேற்று முன்தினம் இரவு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ‘போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் இடத்துக்கு புதிய டாக்டர்கள் நியமிப்படுவார்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் இதை பொருட் படுத்தாமல்  டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். ஒரு சிலர் போராட்டத்தில் இருந்து விலகி மீண்டும் பணிக்கு திரும்பினாலும், கையெழுத்து போடாமல் பணியில் இருந்தனர். நேற்று பிற்பகல் 2 மணி வரை கெடு விதித்திருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டாக்டர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்தனர். அரசு மருத்துவர்கள் இன்று காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் தமிழக அரசு கெடு விதித்து இருந்தது. பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

8-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். சென்னையில், அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது,  முதல்வர் பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தார். போராட்டத்தின் போது அரசு மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேச்சுவார்த்தை தோல்வி; போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் அறிவிப்பு
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.
2. அரசு மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரி; தமிழக அரசு நியமனம்
அரசு மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.