மாநில செய்திகள்

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஜான்குமார் பதவியேற்பு + "||" + Puducherry Kamarajnagar Vol Jankumar sworn in as MLA

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஜான்குமார் பதவியேற்பு

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஜான்குமார் பதவியேற்பு
புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஜான்குமார் பதவியேற்றார் அவருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
புதுச்சேரி, 

முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் புதுவை காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதி காலியானது.

இந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட  ஜான்குமார் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் ஜான்குமார் எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஜான்குமாருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.