தேசிய செய்திகள்

மராட்டிய காங்.தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை + "||" + Senior Maharashtra Pradesh Congress Committee (MPCC) leaders

மராட்டிய காங்.தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை

மராட்டிய காங்.தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், சோனியா காந்தியை மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளனர்.
புதுடெல்லி,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பாரதீயஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. இரு கட்சிகளுக்கும் சேர்த்து மெஜாரிட்டி கிடைத்தபோதும் சிவசேனா முதல்-மந்திரி பதவியிலும், ஆட்சி அதிகாரத்திலும் சமபங்கு கேட்பதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

மராட்டிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில்,  இன்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார். மராட்டியத்தில் பாஜக- சிவசேனா கூட்டணியில் கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் சூழலில், தேசிய வாத காங்கிரஸ் - காங்கிரஸ்  கூட்டணி அமைத்து  ஆட்சி அமைப்பது  குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது
தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என்று சிவசேனா பயப்படுகிறது என மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறியுள்ளார்.
2. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேச்சு
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு ; காங்கிரஸ் குற்றச்சாட்டு
வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
4. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா எங்கள் கட்சியினரின் செயல்பாட்டை முடக்குகிறார்கள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினர் எங்கள் செயல்பாட்டை திட்டமிட்டு முடக்குகிறார்கள் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டினார்.
5. காங்கிரசுக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை -மன்மோகன் சிங்
பாஜக தலைமையிலான மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகள் மக்கள் சார்ந்த கொள்கைகளை எடுக்க விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.