தேசிய செய்திகள்

முதல்வர்கள் யாரும் அழியாதவர்கள் என்று நினைக்கக்கூடாது - உத்தவ் தாக்கரே + "||" + Nobody should think they are immortal as Chief Minister, says Uddhav Thackeray

முதல்வர்கள் யாரும் அழியாதவர்கள் என்று நினைக்கக்கூடாது - உத்தவ் தாக்கரே

முதல்வர்கள் யாரும் அழியாதவர்கள் என்று நினைக்கக்கூடாது - உத்தவ் தாக்கரே
முதல்வர்கள் யாரும் அழியாதவர்கள் என்று நினைக்கக்கூடாது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.
மும்பை

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே வைத்த கோரிக்கையால் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டசபை தலைவராக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் பேசுகையில், சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமையும் என உறுதி அளித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் உத்தவ்தாக்கரே தலைமை தாங்கினார். இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதில் சட்டசபை சிவசேனா தலைவராக பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே  மீண்டும் சட்டசபை சிவசேனா தலைவராக  ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களிடையே பேசிய உத்தவ் தாக்கரே,   

சிவசேனா நிறுவனர் பால்சாகேப் தாக்கரே  சொன்ன வார்த்தையை கடைபிடிக்கும்  ஒரு மனிதர்.  பாஜக அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கான 50-50 சூத்திரம் குறித்த அவர்களின் முந்தைய வாக்குறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும் .

அதிகாரப் பகிர்வு திட்டம் குறித்து பாஜகவிடம் இருந்து எனக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.  அவர்கள் முதல்வர்கள் யாரும் அழியாதவர்கள் என்று நினைக்கக்கூடாது.

மராட்டிய  சட்டமன்றத் தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்பட்டதால், முதல்வர் பதவியில் சிவசேனாவுக்கு சரியான உரிமை உண்டு. எந்தவொரு நபருக்கும் இந்த பதவி எப்போதும் நிரந்தரமாக இருக்காது என கூறினார்.

இந்த நிலையில்  மராட்டியத்தில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் - காங்கிரசுடன் கூட்டணி அமைத்து  ஆட்சி அமைப்பது  குறித்து ஆலோசித்து வருகிறது.

நேற்று  சரத்பவாரை சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி.  சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார். இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் ; இன்று இரவு ஓட்டலில் அணிவகுக்கிறோம் -சஞ்சய் ராவத்
தங்களுக்கு போதுமான பலம் இருப்பதாக கவர்னரிடம் நிரூபிக்கும் வகையில் இன்று 162 எம்.எல்.ஏக்கள் ஓட்டலில் அணிவகுப்பு நடத்துகின்றனர் என சஞ்சய் ராவத் கூறினார்.
2. மராட்டியத்தில் 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்
மராட்டியத்தில் 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.
3. மராட்டியத்தில் இழுபறி முடிவுக்கு வருகிறது: நாளை மூன்று கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றன
மராட்டியத்தில் இழுபறி முடிவுக்கு வருகிறது தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளனர், நாளை 22-ந்தேதி அரசு அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
4. மராட்டிய மாநில அரசியலில் என்ன நடக்கிறது? குழப்பத்தில் அரசியல் கட்சிகள்
மராட்டிய மாநில அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தேசியவாத காங்கிரஸ், சிவசேனா என அனைத்தும் மக்களை குழப்பி வருகின்றன.
5. தாக்கரே குடும்பத்தில் இருந்து யாரும் முதல்வராக கூடாது; ஆதரவு வழங்க காங்கிரஸ் நிபந்தனை
மராட்டியத்தில் அரசு அமைக்க தனது ஆதரவை வழங்குவதற்கு மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்து உள்ளது.