மாநில செய்திகள்

அரசுத் துறைகளில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் பேறு கால விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு + "||" + Temporary holidays for temporary female employees

அரசுத் துறைகளில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் பேறு கால விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

அரசுத் துறைகளில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் பேறு கால விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
அரசுத் துறைகளில் தற்காலிக பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்கும் உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,

அரசுத் துறைகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் 9 மாதங்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே  6 மாதங்களாக இருந்த விடுப்பு  9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. 

அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கியதைப் போல் தற்காலிக முறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க கோரிக்கை எழுந்தது. 

இதைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கும் உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை