மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் பதவியேற்பு + "||" + Winning the by-election AIADMK MLAs Both are sworn in

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் பதவியேற்பு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் பதவியேற்பு
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற முத்தமிழ்ச்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை,

தமிழக சட்டசபையில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் நாங்குநேரி, தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் , விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடு வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்க உள்ள  ரெட்டியார்பட்டி நாராயணன் , முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும்  மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் இருவரும் பதவியேற்றுக்கொண்டனர். இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.