மாநில செய்திகள்

ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை - மு.க.ஸ்டாலின் + "||" + It is the duty of the opposition leader to point out the mistake MKStalin

ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை - மு.க.ஸ்டாலின்

ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை - மு.க.ஸ்டாலின்
ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னை வானகரத்தில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து திருமண விழாவில்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை, ஆனால் முதலமைச்சர் கோபப்படுகிறார். எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படுவேன் என சட்டசபையில் சொன்னேன், அதன்படியே நடக்கிறேன். 2 இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் இந்த வெற்றி தொடராது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தயாராகுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. கூட்டத்தில், உள்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
2. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? - மு.க.ஸ்டாலின் டுவிட்
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
3. பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து - மு.க.ஸ்டாலின்
மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து மு.க.ஸ்டாலின் தகவல்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்தில் இதுவரை கையெழுத்திட்டவரின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல - மு.க.ஸ்டாலின்
மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல பழைய குரல்கள் தான் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை