மாநில செய்திகள்

என் அனுமதியில்லாமல் எடுக்கக் கூடாது - தலைவி படத்துக்கு தடை கேட்கும் ஜெ.தீபா + "||" + Do not take without my permission To the thalaivi film J Deepa calls for a ban

என் அனுமதியில்லாமல் எடுக்கக் கூடாது - தலைவி படத்துக்கு தடை கேட்கும் ஜெ.தீபா

என் அனுமதியில்லாமல் எடுக்கக் கூடாது - தலைவி படத்துக்கு தடை கேட்கும் ஜெ.தீபா
தனது அனுமதியில்லாமல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகி வரும் தலைவி படத்தை எடுக்க தடை விதிக்க கோரி தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதே போல் கவுதம் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் தனது வாழ்க்கையை சேர்க்காமல் திரைப்படத்தை, இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும், இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு
தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
2. பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி
பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி அளித்துள்ளது.
3. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை இடையூறின்றி பேனர் வைக்க சென்னை ஐகோர்ட் அறிவுரை
சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை இடையூறின்றி பேனர் வைக்க சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.
4. ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமானியை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து சமரசம்
ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமானியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.
5. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் - ஜெ.தீபா
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்து உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை