மாநில செய்திகள்

நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினம்: துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், விஜயகாந்த் வாழ்த்து + "||" + November 1st is Tamil Nadu Day Greetings from Vijayakanth

நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினம்: துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், விஜயகாந்த் வாழ்த்து

நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினம்:  துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், விஜயகாந்த் வாழ்த்து
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினத்தையொட்டி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், விஜயகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,

தமிழ் மாநிலம் உருவான நாள் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததோடு, அந்த கொண்டாட்டங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்.

முன்னதாக இப்படியாக ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசி வந்தார். தமிழ்மொழி பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், பல தமிழ் அமைப்புகளும், தமிழக தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தமிழ் மாநிலம் உருவான நவம்பர் 1-ந் தேதியை அரசே விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். அந்த எதிர்பார்ப்பு இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்நிலையில்  தமிழ்நாடு தினத்தையொட்டி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்தும் விதமாக மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டிய அண்ணா அவர்களையும், இதற்காக போராடிய சங்கரலிங்கனார் உள்ளிட்ட தலைவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்  டுவிட்டர் பதில் கூறியிருப்பதாவது:- 

நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது.  தமிழனென்று சொல்லடா!  தலை நிமிர்ந்து நில்லடா!  என்ற கூற்றுப்படி,  நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு, எப்போதும் ஒன்றுபட்டு தமிழர்கள், தமிழ்நாட்டின், முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்! என்று சூளுரைப்போம்.  தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.