தேசிய செய்திகள்

இந்தியா - ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது + "||" + 20 deals signed between India and Germany

இந்தியா - ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

இந்தியா - ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முன்னிலையில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
புதுடெல்லி

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக  ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்  இந்தியா வந்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வரவேற்றனர்.

இந்தியா வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாபெரும் நாடான இந்தியாவின் பன்முகத்தன்மையை மிகவும் மதிப்பதாகவும், இந்தியாவும்-ஜெர்மனியும் நெருக்கமான உறவைப் பேணுவதாகவும்  ஏஞ்சலா மெர்க்கல் அப்போது குறிப்பிட்டார். 

ஜனாதிபதி  மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து, ராஜ்காட் சென்ற ஏஞ்சலா மெர்க்கல், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக தமது அமைச்சர் குழுவுடன் டெல்லி வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இன்று பிரதமர் மோடியுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த பேச்சுவார்த்தையை அடுத்து இந்தியா ஜெர்மனி இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், ஏஞ்சலா மெர்க்கலுடன் வந்திருந்த ஜெர்மன் குழுவினர் பங்கேற்றனர். இதேபோல, பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர்  பங்கேற்றனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு தலைவர்கள் முன்னிலையில், இந்தியா-ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தொடர்புடைய செய்திகள்

1. உயிரியல் -வேதியியல் ஆயுத தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வாங்க பாகிஸ்தான் முயற்சி
உயிரியல் மற்றும் வேதியியல் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வாங்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாக ஜெர்மனி அரசு தெரிவித்து உள்ளது.
2. டெல்லியில் கட்டணம் செலுத்தி தூய்மையான காற்றை சுவாசிக்கலாம்
டெல்லியில் கட்டணம் செலுத்தி தூய்மையான காற்றை சுவாசிக்கும் ஆக்சிஜன் பார் திறக்கப்பட்டு உள்ளது.
3. தலைநகர் டெல்லியில் போலீசாரின் திடீர் போராட்டம்-பதற்றம்
தலைநகர் டெல்லியில் போலீசாரின் திடீர் போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
4. டெல்லி- திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் : போலீசார் அதிரடி சோதனை
டெல்லி- திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
5. வெங்காயம் கிலோ ரூ.22 -அலைமோதும் கூட்டம்
ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் என்ற விலையில் டெல்லியில் விற்கப்படுகிறது. டெல்லி முழுவதும் மக்கள் வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.