தேசிய செய்திகள்

மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.76 உயர்ந்தது + "||" + Increase in subsidized cooking gas cylinder price

மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.76 உயர்ந்தது

மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.76 உயர்ந்தது
சென்னையில் மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.76 உயர்ந்தது. புதிய விலை ரூ.696 ஆகும்.
புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நமது நாட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

அந்த வகையில் நேற்று மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக உயர்த்தி உள்ளன.


ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு மானிய விலை சிலிண்டர் வீதம் ஆண்டுக்கு 12 மானிய சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகின்றன. அதற்கு கூடுதலான தேவைக்கு மானியமில்லா சிலிண்டரைத்தான் வாங்கியாக வேண்டும்.

விலை உயர்வு தொடர்பாக இந்திய எண்ணெய் கழகம் ஐ.ஓ.சி. நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.76 உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் இந்த சிலிண்டரின் விலை ரூ.620 ஆக இருந்தது. இப்போது ரூ.76 உயர்த்தப்பட்டுள்ளதால் சிலிண்டர் விலை ரூ.696 ஆகி உள்ளது.

மும்பையிலும், டெல்லியிலும் மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.76.50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த மாதம் சிலிண்டர் விலை ரூ.574.50 ஆக இருந்தது. புதிய விலை ரூ.651 ஆகும்.

டெல்லியில் கடந்த மாதம் சிலிண்டர் விலை ரூ.605. புதிய விலை 681.50 ஆகும்.

இது தொடர்பான உத்தரவுகள், கியாஸ் ஏஜென்சிகளுக்கு எண்ணெய் நிறுவனங்களால் அனுப்பப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் 9 காசுகள் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 9 காசுகள் அதிகரித்து ரூ.84.91 என்ற விலையில் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 216 ரூபாய் உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்துள்ளது.
3. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: சோனியா காந்தி கண்டனம்
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
4. மதுபானங்கள் விலை உயர்வு - குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்தது
தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்தது.