தேசிய செய்திகள்

கோணலான பற்கள் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன் + "||" + Hyderabad Man gives triple talaq over 'crooked teeth'

கோணலான பற்கள் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன்

கோணலான பற்கள் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன்
கோணலான பற்கள் இருப்பதாக கூறி மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம்  ஐதராபாத்தை சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மனைவி ருக்சனா பேகம் . இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் ருக்சனா பேகம் ஐதராபாத் போலீசில்  புகார் ஒன்று அளித்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

புகாரில் தன்னை கணவரும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். எனது பற்களின் வரிசை ஒழுங்காக இல்லை என்று கூறி கணவர் முஸ்தபா எனக்கு முத்தலாக்  கொடுத்துள்ளார் என்று கூறி
உள்ளார்.

இதைத் தொடர்ந்து  போலீசார் முஸ்தபா மீது வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.