தேசிய செய்திகள்

வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு - மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு + "||" + Whatsapp information spy - Priyanka Gandhi's allegation against Central Government

வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு - மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு - மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.


இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்-அப் தகவல்கள், இஸ்ரேல் நிறுவனத்தின் மூலம் உளவு பார்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இது, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வரும், நவம்பர் 4-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு, 'வாட்ஸ் -அப்' நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மத்திய அரசை குற்றம் சாட்டி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் 'வாட்ஸ்-அப்' தகவல்களை உளவு பார்க்க, இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டிருந்தால், அது மிகப்பெரிய மனித உரிமை மீறல்; தேசிய பாதுகாப்புக்கும் எதிரானது. இவ்விவகாரத்தில் அரசின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தொட்டது
‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை எட்டியுள்ளது.
2. வாட்ஸ்-அப், கூகுள் பாதுகாப்பானதா?
தற்போது மோசடியான பரிவர்த்தனைகளை பற்றி விசாரணை மேற்கொள்ள அமெரிக்காவுடன் அனுமதி பெற வேண்டிய சூழல் உள்ளது. உங்களின் வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
3. வாட்ஸ்-அப்பில் இழிவாக பேசி பதிவிட்டதை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல் - 4 பேர் மீது வழக்குப்பதிவு
கூத்தாநல்லூரில் வாட்ஸ்-அப்பில் இழிவாக ேபசி பதிவிட்டதை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.