தேசிய செய்திகள்

மாநிலம் உதயமான தின கொண்டாட்டம்: சோனியா காந்தியின் சத்தீஷ்கார் பயணம் ரத்து + "||" + State Udayam Day celebration: Sonia Gandhi Chhattisgarh trip cancellation

மாநிலம் உதயமான தின கொண்டாட்டம்: சோனியா காந்தியின் சத்தீஷ்கார் பயணம் ரத்து

மாநிலம் உதயமான தின கொண்டாட்டம்: சோனியா காந்தியின் சத்தீஷ்கார் பயணம் ரத்து
சத்தீஷ்கார் மாநிலம் உதயமான தின கொண்டாட்டத்தில் பங்கேற்க இருந்த சோனியா காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் உதயமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. அது தோற்றுவிக்கப்பட்ட தினம், 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா, நேற்று இரவு 7 மணிக்கு தலைநகர் ராய்ப்பூரில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முதல்-மந்திரி பூபேஷ் பாகல் அழைப்பு விடுத்திருந்தார். சோனியா காந்தியும் சம்மதம் தெரிவித்து இருந்தார்.மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சத்தீஷ்காருக்கு சோனியா காந்தி வர இருந்ததால், காங்கிரஸ் தொண்டர்கள் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளுடன் வரவேற்க தயாராகினர்.


ஆனால், சோனியா காந்தியின் சத்தீஷ்கார் பயணம் நேற்று கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதை மாநில மந்திரி அமர்ஜித் பகத் தெரிவித்தார். இதையடுத்து, சோனியா காந்திக்கு பதிலாக, முதல்-மந்திரியே விழாவை தொடங்கிவைத்தார்.