தேசிய செய்திகள்

மாநிலங்கள் தொடங்கப்பட்ட தினம்: கேரள, கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து + "||" + The day the states were started: Prime Minister congratulates the people of Kerala and Karnataka

மாநிலங்கள் தொடங்கப்பட்ட தினம்: கேரள, கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

மாநிலங்கள் தொடங்கப்பட்ட தினம்: கேரள, கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
மாநிலங்கள் தொடங்கப்பட்ட தினத்தையொட்டி கேரள, கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி,

மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ், கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களும், லட்சத்தீவு யூனியன் பிரதேசமும் தொடங்கப்பட்டன. இதையொட்டி, அந்த மாநிலங்களின் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கேரள மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டுக்கு கேரள மக்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

கர்நாடக மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவின் முன்னேற்றத்துக்கு கர்நாடக மக்கள் பிரமாதமான பங்களிப்பை செய்துள்ளனர். கர்நாடகாவின் இயற்கை அழகும், மக்களின் பரந்த மனப்பான்மையும் அனைவரும் அறிந்ததுதான். இனிவரும் காலங்களில் கர்நாடகாவின் வளர்ச்சிக்காக வேண்டுகிறேன்” என்று மோடி கூறியுள்ளார்.

அரியானா, மத்தியபிரதேசம் ஆகிய மாநில மக்களுக்கும் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், அரியானா, பஞ்சாப் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேச மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.