தேசிய செய்திகள்

ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி + "||" + Delhi: Prime Minister Narendra Modi departs for a 3-day visit to Thailand.

ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி
ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து புறப்பட்டார்.
புதுடெல்லி,

இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதைப்போல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று பாங்காங் புறப்பட்டுச்சென்றார். 

இந்த பயணத்தின்போது பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார். மேலும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிடுகிறார். அத்துடன் ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிடுகிறார்.

பின்னர் நாளை நடைபெறும் இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்வின்போது பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

பாங்காக்கில் நடைபெறும் ஆசியான் அமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளின் முக்கியமான பகுதி என வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் விஜய் தாகூர் தெரிவித்தார்.

அதேநேரம் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு விவகாரத்தில் சில சிக்கலான பிரச்சினைகள் இருப்பதாக கூறிய அவர், அவற்றை களைவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நமது பொருளாதாரம் மற்றும் நமது மக்களின் வாழ்வாதாரத்துக்காக இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என்றும் விஜய் தாகூர் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. காவலாளியே திருடன்; பிரதமருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு
காவலாளியே திருடன் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
2. 11வது பிரிக்ஸ் உச்சி மாநாடு; பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டார்
11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
3. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
4. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி
பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்.
5. நல்லிணக்கம், இரக்க உணர்வு சமூகத்தில் அதிகரிக்கட்டும்; பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து
பிரதமர் மோடி மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.