தேசிய செய்திகள்

6 பேர் கொலை: காஷ்மீரிலிருந்து 131 தொழிலாளர்களை மேற்கு வங்காள அரசு திரும்ப அழைத்து கொண்டது + "||" + Bengal govt bringing back 131 workers from Kashmir days after terrorists killed 6 labourers

6 பேர் கொலை: காஷ்மீரிலிருந்து 131 தொழிலாளர்களை மேற்கு வங்காள அரசு திரும்ப அழைத்து கொண்டது

6 பேர் கொலை: காஷ்மீரிலிருந்து 131 தொழிலாளர்களை மேற்கு வங்காள அரசு திரும்ப அழைத்து கொண்டது
6 பேர் சுட்டுக் கொலை: காஷ்மீரில் உள்ள 131 மேற்கு வங்காள தொழிலாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி திரும்ப அழைத்து கொண்டார்.
கொல்கத்தா

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில்  மேற்கு வங்காள தொழிலாளர்கள் 6  பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.  அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில், வெளிமாநிலத்தைச்சேர்ந்த டிரக் ஓட்டுநரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

தொடர்ந்து வெளிமாநிலத்தவரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, அங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதை தொடர்ந்து அங்கு வேலைசெய்யும் 131 மேற்கு வங்காள தொழிலாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி திரும்ப அழைத்து கொண்டார்.

காஷ்மீரில் உள்ள மொத்தம் 131 தொழிலாளர்கள் மீண்டும் மாநில அரசின் உதவியுடன் மேற்கு வங்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். அவர்கள் முர்ஷிதாபாத், தினாஜ்பூர் மற்றும் மால்டாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர்  மம்தா பானர்ஜி உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்பட 3 பேர் காயம்
பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
2. ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்
ரோந்து சென்ற மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.
3. ஜம்மு காஷ்மீரில் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
4. காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
5. பாகிஸ்தான் விசாவுடன் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 200 இளைஞர்கள் மாயம் - உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட இளைச்சரிக்கைஞர்கள் பாகிஸ்தான் விசாவுடன் காணாமல் போயுள்ளதை அடுத்து உளவுத்துறை எச்சரிக்கை செய்து உள்ளது.