உலக செய்திகள்

அமெரிக்கா, தென்கொரியா வரிசையில் 5ஜி சேவையை துவக்கியது சீனா + "||" + China rolls out 'one of the world's largest' 5G networks

அமெரிக்கா, தென்கொரியா வரிசையில் 5ஜி சேவையை துவக்கியது சீனா

அமெரிக்கா, தென்கொரியா வரிசையில் 5ஜி சேவையை துவக்கியது சீனா
இணைய தொழில் நுட்பத்தில் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிஜீங்,

இணைய தொழில் நுட்பத்தில் தற்போது பல நாடுகளில் 4 ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது.   இதற்கு அடுத்தபடியாக உள்ள 5 ஜி சேவையை அளிக்க சீனா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.  இந்த 5 ஜி சேவையில் இணைய வேகம் 4 ஜி சேவையை விட 20 முதல் 100 மடங்கு வரை அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.  

கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் புதிய 5 ஜி மொபைலை வெளியிட்டது.  அமெரிக்கா தனது 5ஜி மொபைல் சேவையை அடுத்த சில வாரங்களில் வெளியிட்டது.

இந்தநிலையில் இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

பீஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த 5ஜி சேவையை உலகம் முழுவதும் கொண்டு வர சீனா திட்டமிட்டுள்ளது. 

5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க அமெரிக்காவும், சீனாவும் போட்டி போட்டு வந்த நிலையில், முதல்கட்டமாக சீனா அதனை தங்கள் நாட்டிலேயே அறிமுகம் செய்துள்ளது.

5ஜி சேவை பெற குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1272 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சக் கட்டணமான ரூ.6000 செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜி.பி. டேட்டாவைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.