தேசிய செய்திகள்

தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு - ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு + "||" + We will also earmark Euros 200 Million to reform bus sector in Tamil Nadu German Chancellor Angela Merkel at a business meeting in Delhi

தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு - ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு - ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு செய்யப்படும் என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், அரசு முறை பயணமாக நேற்று காலை இந்தியா வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டு, ஏஞ்சலா மெர்கலை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பின்னர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்று ஏஞ்சலா மெர்கல் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் தலைமையில் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 5-வது உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தலைவர்களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன.  

இந்தநிலையில் 2-வது நாளாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேசியதாவது:- 

நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத பசுமை போக்குவரத்திற்காக இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து செயல்படுகிறது. இந்தோ-ஜெர்மன் இணைந்து பசுமை நகர்புறத்திட்டத்திற்கு  1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளோம்.

தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு செய்யப்படும்.  டெல்லியில் காற்று மாசுப்பாட்டை குறைக்க டீசல் பேருந்துக்கு பதில் மின்னணு பேருந்துகள் போன்ற நல்ல வழியை காணவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.