தேசிய செய்திகள்

ஜனாதிபதி உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? பாஜகவுக்கு சிவசேனா கேள்வி + "||" + Will Soon Drop Wait And Watch Mode Sena Warns On Maharashtra Impasse

ஜனாதிபதி உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? பாஜகவுக்கு சிவசேனா கேள்வி

ஜனாதிபதி உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? பாஜகவுக்கு சிவசேனா கேள்வி
ஜனாதிபதி உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? அல்லது அவரது முத்திரை பாஜக அலுவலகத்தில் உள்ளதா? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை

மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் முடிவுகள் வெளியாகி இன்றுடன் 10 நாட்களாகிறது. புதிய அரசு அமைவதில் இழுபறி நிலவி வருகிறது. 

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் 161 இடங்களை பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கைப்பற்றினாலும், இரு கட்சிகளிடையே அதிகார பகிர்வில் மோதல் போக்கு நில வருகிறது.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி., மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “ஆட்சியில் 50:50 பார்முலா (சம பங்கு) அடிப்படையில்தான் மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர். இந்த திட்டம் மக்கள் மத்தியில் சென்றடைந்து உள்ளது. சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்-மந்திரியாக இருப்பார்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாரதீய ஜனதா உடன்பாட்டுக்கு வராத பட்சத்தில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதையொட்டி சரத்பவாரை சஞ்சய் ராவத் சந்தித்து பேசியதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், நிதி மந்திரியுமான சுதீர் முங்கண்டிவார் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் மக்கள் தீர்ப்பு. விரைவில் கூட்டணி அரசு அமையும். ஒருவேளை வழங்கப்பட்ட காலத்துக்குள் (வரும் 7-ந்தேதி) புதிய அரசு அமையவில்லை என்றால், விதிமுறைகளின்படி ஜனாதிபதி தலையிடுவார். அவர் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவார்” என தெரிவித்தார்.

இது மராட்டிய மாநில அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து உத்தவ் தாக்கரே கூறும் போது "பாஜக அதிகாரத்தை கோருவதற்கான அனைத்து வழிகளையும்  கையாண்ட  பின் இந்த அச்சுறுத்தல் கொடுத்து உள்ளதா?  சிவசேனா விரைவில் மராட்டியத்தில் தனது காத்திருப்பை கைவிடும் என கூறி உள்ளார்.

சிவசேனாவின்  "சாம்னா" பத்திரிகையின் தலையங்கத்தில் கடுமையான தாக்குதல் தொடங்கி உள்ளது . பத்திரிகையில்  ஜனாதிபதி உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? மராட்டியத்தை அவமதிப்பதா" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு   உள்ளது.

கட்டுரையில் "உங்கள் (பாஜக) கட்டுப்பாட்டின் கீழ் ஜனாதிபதி இருக்கிறாரா? அல்லது ஜனாதிபதியின் முத்திரை பாஜக அலுவலகத்தில் உள்ளதா? இது கட்சியில் மாநிலத்தில் அரசாங்கத்தை உருவாக்க முடியாவிட்டால், மராட்டியத்தில்  ஜனாதிபதியின் ஆட்சியை அமுல்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் ஜனாதிபதியுடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு
டெல்லியில் ஜனாதிபதியுடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் இன்று சந்தித்து பேசினார்.
2. இந்தியாவை பாதுகாத்தவர்களின் துணிச்சலுக்கு தலைவணங்குவோம்: ஜனாதிபதி
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாட்டை பாதுகாத்தவர்களுக்கு தலைவணங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
3. மேற்கு வங்காளம்- பீகார் ஆளுநர்கள் மாற்றம்
மேற்கு வங்காளம்- பீகார் மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
4. ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அமித்ஷா நேற்று சந்தித்தார்.