உலக செய்திகள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நடத்தப்படும் விதத்தால் உயிர்இழக்க நேரிடும்: ஐ.நா. நிபுணர் + "||" + Treatment of WikiLeaks founder Julian Assange may end up costing his life: UN expert

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நடத்தப்படும் விதத்தால் உயிர்இழக்க நேரிடும்: ஐ.நா. நிபுணர்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நடத்தப்படும் விதத்தால் உயிர்இழக்க நேரிடும்: ஐ.நா. நிபுணர்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயின் சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சையால் அவர் உயிர் இழக்க கூடும் என ஐ.நா. நிபுணர் ஒருவர் கூறி உள்ளார்.
ஜெனிவா

அமெரிக்க ராணுவ ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ இணைய தளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (47) வெளியிட்டார். இதனால் விதிக்கப்படும் மரணதண்டனை மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்து அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார்.  அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார்.

அவர் தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

உளவு குற்றச்சாட்டில் பிரிட்டனில் இருந்து அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின்  சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சையே அவரது உயிருக்கு ஆபத்தாக அமையும் என  ஐ.நா.வின்  நிபுணர் நில்ஸ் மெல்சர்   தெரிவித்து உள்ளார்.

ஐ.நா.வின் சிறப்பு நிபுணர்  நில்ஸ் மெல்சர்  கூறியதாவது:-

கடுமையான கவலை, மன அழுத்தம் மற்றும் உதவியற்ற தன்மை ஆகியவற்றால் அசாஞ்சேயின் உடல்நலம் படிப்படியாக  குறைந்து வருகிறது.  துல்லியமாக என்ன நடக்கும் என  உறுதியாகக் கணிப்பது கடினம் என்றாலும்  மாரடைப்பு அல்லது நரம்பு தளர்வு  சம்பந்தப்பட்ட உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையாக விரைவாக உருவாகலாம்.

தனிமை மற்றும் கண்காணிப்பின் அடக்குமுறை நிலைமைகளின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது சட்ட ஆலோசனை மற்றும் ஆவணங்களுக்கான அணுகல் கடுமையாக தடைபட்டுள்ளது.

 அசாஞ்சேயின் உடல்நலம் மற்றும் கவுரவத்தைப் பாதுகாக்க லண்டன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே
 நான் கோரிக்கை வைத்து இருந்தேன்.

 இங்கிலாந்து அரசு அசாஞ்சேயின் உரிமைகள் மற்றும் ஒருமைப்பாட்டை முற்றிலும் அவமதிக்கிறது. 

எனது முறையீட்டில்  மருத்துவ அவசரம் மற்றும் மீறல்கள்  தீவிரத்தன்மை இருந்தபோதிலும், சர்வதேச சட்டத்தின் கீழ் தேவைப்படும் விசாரணை, காவல் மற்றும் நிவாரணம் ஆகியவற்றின் எந்த நடவடிக்கைகளையும் இங்கிலாந்து மேற்கொள்ளவில்லை.

அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டு அவரது உடல்நிலையை மீட்டெடுக்கவும் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கவும் அனுமதிக்க வேண்டும்.

சித்திரவதை மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டதற்காக அமெரிக்க அரசு அசாங்கே மீது வழக்குத் தொடர்ந்தாலும், இந்த குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தொடர்ந்து தண்டனையை அனுபவிக்கவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. லண்டன் சிறையில் ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் அசாஞ்சே உடல்நிலை மோசமடைகிறதா?
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உலகமெங்கும் பிரபலமானவர், ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே.