பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் இரட்டை தரநிலை இன்றி அனைத்து சர்வதேச சட்டங்களையும் அமல்படுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங் + "||" + Should implement all international laws without duality in dealing with terrorists; Rajnath Singh
பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் இரட்டை தரநிலை இன்றி அனைத்து சர்வதேச சட்டங்களையும் அமல்படுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங்
பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் இரட்டை தரநிலை இன்றி அனைத்து சர்வதேச சட்டங்களையும் அமல்படுத்த வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தாஷ்கன்ட்,
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகருக்கு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் இந்தியா சார்பில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இன்று பேசும்பொழுது, பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் இரட்டை தரநிலை இன்றி நடைமுறையில் உள்ள சர்வதேச சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சர்வதேச சமூகம் ஆனது தீங்கு தரும் இந்த விசயத்திற்கு எதிராக போராட ஒன்றிணைய வேண்டும். இந்த புதிய அச்சுறுத்தல்கள் பன்முக தன்மையுடனும், சிக்கல் நிறைந்தும் உள்ளன. இவை வளர்ந்து வரும் நாடுகளில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், வறுமை மற்றும் சமத்துவமின்மை போன்றவை ஒன்றிணைந்தே தோற்கடிக்கப்பட முடியும். தனித்து அல்ல என கூறியுள்ளார்.