தேசிய செய்திகள்

இசை கச்சேரி பிரச்சினை: திருமண வீடு போர்க்களமானது வைரலாகும் வீடியோ + "||" + 3 injured as brawl breaks out between bride, groom families in Telangana

இசை கச்சேரி பிரச்சினை: திருமண வீடு போர்க்களமானது வைரலாகும் வீடியோ

இசை கச்சேரி பிரச்சினை: திருமண வீடு போர்க்களமானது வைரலாகும் வீடியோ
இசை கச்சேரி பிரச்சினையில் திருமண வீடு போர்க்களமானது பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி சண்டையிட்டு கொண்டனர்.
ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம்   சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட் மண்டலத்தைச் சேர்ந்த அஜய்  என்பவருக்கு  ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரஜா  என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் அக்டோபர் 29 அன்று நடந்தது. அன்று திருமண  கொண்டாட்டங்களின் போது, கிராமத்தில் இசைக்கச்சேரி  நடத்துவது தாமதமானது தொடர்பாக மணமகன் மணமகள் வீட்டாருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து அது கடும் வாக்குவாதமாக மாறியது. சிறிது நேரத்தில்  அது மோதலாக வெடித்து ஒருவருக்கொருவர் நாற்காலிகளால் தாக்கி கொண்டனர். நாற்காலிகளை தூக்கி வீசினர். இதில் பெண்களும் விதி விலக்கல்ல.

தகவல் கிடைத்த உடனேயே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரு தரப்பினருக்கும்  நடந்த மோதலில் காயம் அடைந்த 3 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் புதுமண தம்பதியினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் புகாரைப் பதிவு செய்ய விரும்பவில்லை  என்று கூறினர். 

வீடியோவில், திருமணத்தில் விருந்தினர்கள் ஒரு தற்காலிக கூடாரத்திற்குள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசும் அசிங்கமான சண்டையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி  உள்ளது.