உலக செய்திகள்

டுவிட்டரை விட ரெட்டிட் நன்றாக உள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்க் விலகல் + "||" + Elon Musk Quitting Twitter for Reddit? Tesla Billionaire Says Hes Going Offline

டுவிட்டரை விட ரெட்டிட் நன்றாக உள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்க் விலகல்

டுவிட்டரை விட ரெட்டிட் நன்றாக உள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்  எலான் மாஸ்க் விலகல்
தனது டுவீட் மூலம் அடிக்கடி சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்ளும் டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்

தாய்லாந்து குகைக்குள் கடந்த ஆண்டு சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுரங்க வீரர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டுவீட்கள் மூலம் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்துவதாக அமெரிக்காவின் பங்குச் சந்தை ஆணையமும் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த நிலையில் டுவிட்டரால் நற்பயன் இருப்பதாக தெரியவில்லை என்றும் ரெட்டிட்(Reddit) என்ற சமூக ஊடகம் நன்றதாக இருப்பதாகவும் ஆப் லைனுக்கு போகிறேன் என்றும் அடுத்தடுத்து 3 டுவீட்டுகளை எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

29 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள அவரின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள பலரும், மீண்டும் டுவிட்டருக்கு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அஜித்தின் விஸ்வாசம் படம் ட்விட்டர் டிரெண்டிங்கில் புதிய சாதனை
அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ட்விட்டர் டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்துள்ளது.
2. உலக அளவில் செயலிழந்த சமூக வலைதளம் ட்விட்டர்
உலக அளவில் தொழிநுட்ப கோளாறால் செயலிழந்து உள்ளது சமூக வலைதளம் ட்விட்டர்.