தேசிய செய்திகள்

4-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு + "||" + Congress calls Opposition meeting on November 4 to firm up strategy for 10-day protest over economic slowdown

4-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு

4-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு
காங்கிரஸ் கட்சி 4-ம் தேதி நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

மக்களவையில் தொடர்ந்து இரண்டாம் முறையாக காங்கிரஸ் தோல்வி அடைந்தது. எனினும்,  சமீபத்தில் நடைபெற்ற அரியானா, மராட்டிய சட்டப்பேரவை தேர்தல்களில் கிடைத்த கூடுதல் தொகுதிகள் சற்று உற்சாகத்தை அளித்துள்ளது.  

இந்நிலையில்,  நவம்பர் 4 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி  அழைப்பு விடுத்துள்ளார்.  இவர்களுடன் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து தேசிய அளவில் 10 நாட்களுக்குப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதில், பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்சினை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை முன்னிறுத்தப்பட உள்ளன. இந்தப் போராட்டம் அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலையும், நவம்பர் 30-ல் தொடங்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் முன்னிறுத்தி நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.