கிரிக்கெட்

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டி; சிவம் துபே விளையாடுவார் என ரோகித் சர்மா சூசக தகவல் + "||" + Rohit hints at Dube's India debut on Sunday

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டி; சிவம் துபே விளையாடுவார் என ரோகித் சர்மா சூசக தகவல்

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டி; சிவம் துபே விளையாடுவார் என ரோகித் சர்மா சூசக தகவல்
வங்காளதேச அணிக்கு எதிராக நாளை நடைபெறும் இருபது ஓவர் போட்டியில் சிவம் துபே விளையாடுவார் என ரோகித் சர்மா சூசக தகவல் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

இந்திய மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது.  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வு பெற்று உள்ள நிலையில் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பேற்றிருக்கும் ரோகித் சர்மா நாளை நடைபெறும் போட்டியில், ஆல் ரவுண்டராக சிவம் துபே விளையாடுவார் என்ற சூசக தகவலை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் விளையாட கூடிய சூழலில் உள்ளனர்.  எனினும், அவர்களில் ஒருவர் நிச்சயம் விளையாடுவார்.  ஆடும் லெவன் அணியில் விளையாடுவதற்கு ஒவ்வொருவருக்கும் கதவுகள் திறந்திருக்கின்றன.  எந்த நிலையிலும், ஆடும் லெவன் அணியில் யார் வேண்டுமென்றாலும் விளையாடலாம் என கூறினார்.

கடந்த வருடம் ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் சிறந்த முறையில் துபே விளையாடினார்.  அதனாலேயே அவரை வாங்க மக்கள் ஆர்வமுடன் இருந்தனர்.  தரவரிசையில் கடந்த வருடம் வந்தவர்களில் அவரும் ஒருவர் என்றும் கூறினார்.

இதேபோன்று ரிஷப் பன்ட்டுக்கு ஆதரவாகவும் அவர் பேசியுள்ளார்.  15 முதல் 20 வரையிலான இருபது ஓவர் போட்டிகளிலேயே பன்ட் விளையாடியுள்ளார்.  இதனை வைத்து அவரை முடிவு செய்ய இயலாது.  அவரை பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது.  அவர் அணியில் விளையாட நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.  இதனால் அணியில் சஞ்சு விளையாடுவதற்கான சாத்தியம் இல்லாத சூழல் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிக்ஸர்களில் சாதனை படைக்க இருக்கும் ரோகித் சர்மா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.
2. லாராவின் 400 ரன் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் - வார்னர் கணிப்பு
லாராவின் 400 ரன்கள் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என வார்னர் தெரிவித்துள்ளார்.
3. பந்து தாக்கி ரோகித் சர்மா காயம்
பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ரோகித் சர்மா காயமடைந்தார்.
4. இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்: அசத்தும் ரோகித் சர்மா
இந்திய அணி வீரர் ரோகித் சர்மா இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வருகிறார்.
5. ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவார்’ -ரஹானே
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவாரா? என்பது குறித்து எனக்கு இன்னும் தெரியாது. அவர் தொடக்க வீரராக இறங்கினால், எனக்கு மகிழ்ச்சி தான்.