தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு: பொதுமக்கள் அவதி + "||" + Air pollution in Delhi: public humiliation

டெல்லியில் காற்று மாசு: பொதுமக்கள் அவதி

டெல்லியில் காற்று மாசு: பொதுமக்கள் அவதி
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வருகிற 5-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு காணப்படும் மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஏராளமானோர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் தலைவலியால் அவதியடைந்துள்ளனர். மணிக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் காற்று மாசு சற்று குறைந்து வருவதாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 10 மணியளவில் காற்று தரக்குறியீடு 407ஆக குறைந்து பதிவானது. முந்தைய தினம் இதே நேரத்தில் 484ஆக பதிவாகியிருந்தது. மஹா புயல் காரணமாக நவம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் பரவலாக மழைபெய்ய வாய்ப்பிருப்பதால் காற்று மாசு குறையும் எனவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் காற்று மாசு கட்டுப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல்
சென்னையில் காற்று மாசு கட்டுப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் ஜனாதிபதியுடன் இளவரசர் சார்லஸ் சந்திப்பு
டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இளவரசர் சார்லஸ் சந்தித்தார்.
3. டெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை
டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட டெல்லி அரசாங்கத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
4. கழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம்: பொதுமக்கள் எதிர்ப்பு
கழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டு இருந்ததனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
5. சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது
இன்று, சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது.