தேசிய செய்திகள்

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடின + "||" + 8 coaches get detached from Visakha Express, none injured

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடின

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடின
ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் பாலுகோன் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு ரெயிலில் இருந்து 8 பெட்டிகள் கழன்று ஓடின. இதுபற்றி அறிந்ததும் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் அந்த பெட்டிகள் ரெயிலில் இணைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு; தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது
ஒடிசாவில் 4 வயது சிறுமி கற்பழிப்பு சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார்.
2. தெலுங்கானாவில் ஒரே நாளில் இரு ரெயில் விபத்துகள்; 35 பேர் காயம்
தெலுங்கானாவில் ஒரே நாளில் இரு ரெயில் விபத்துகள் ஏற்பட்டதில் 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.
3. ஒடிசா மிருகக்காட்சி சாலையில் வைரஸ் தாக்குதலுக்கு 4 யானைகள் சாவு
ஒடிசா மிருகக்காட்சி சாலையில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 4 யானைகள் உயிரிழந்தது.
4. ஒடிசாவில் வெளிநாட்டுக்காரர் மகன்களுடன் கொலை: 20 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளி கைது
ஒடிசாவில் வெளிநாட்டுக்காரர் மகன்களுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.