தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் நீக்கம் + "||" + Removal of restrictions in Srinagar

ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் நீக்கம்

ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் நீக்கம்
ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலான இடங்களில் நீக்கப்பட்டன. எனினும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஆங்காங்கே இன்னும் அவை அமலில் உள்ளன.


இந்த நிலையில் ஸ்ரீநகரின் பல இடங்களில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டன.

எனினும் ஸ்ரீநகர் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் 90-வது நாளாக நேற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடைகள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் ஒருசில தனியார் வாகனங்களை தவிர அரசு வாகனங்கள் எதையும் காண முடியவில்லை. நகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசி இணைப்புகள் மற்றும் போஸ்ட்பெய்டு செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்டாலும், இணையதள முடக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவர்களை தவிர பிற மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. இதனால் கல்வி நிறுவனங்கள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தான் துணை முதல் மந்திரி, பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்
ராஜஸ்தான் துணை முதல் மந்திரி, பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சி நீக்கியுள்ளது.
2. காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
புதுவை வந்த காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
3. கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கு: வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.
4. விழுப்புரத்தில் காதல் திருமண புகார்-கைது எதிரொலி: ரெயில்வே போலீஸ்காரர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
விழுப்புரத்தில் காதல் திருமண புகார், கைது எதிரொலியாக ரெயில்வே போலீஸ்காரர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
5. சிறுவன் தலையில் பாய்ந்த 4 அங்குல அம்பு அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கம்
மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுவனின் தலையில் 4 அங்குல அளவிற்கு பாய்ந்திருந்த அம்பு அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.