தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய மாணவர்கள் 1,600 பேர் கல்விக்காக இந்தியா வருகை + "||" + Next year, 1,600 Australian students will visit India for education

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய மாணவர்கள் 1,600 பேர் கல்விக்காக இந்தியா வருகை

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய மாணவர்கள் 1,600 பேர் கல்விக்காக இந்தியா வருகை
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய மாணவர்கள் 1,600 பேர் கல்விக்காக இந்தியா வருகை தர உள்ளனர்.
புதுடெல்லி,

நாடுகளுக்கு இடையேயான கலாசார விழிப்புணர்வு மற்றும் அனுபவங்களை தெரிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு புதிய கொழும்பு திட்டத்தை அந்த நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1607 மாணவர்கள் கல்வி மற்றும் பணி சார்ந்த அனுபவங்களுக்காக அடுத்த ஆண்டு (2020) இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான அந்த நாட்டு பொறுப்பு தூதர் ரோட் ஹில்டன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில், ‘இந்திய உடற்கல்வி திட்டங்கள் மற்றும் கரிம கழிவு மேலாண் திட்டங்கள் உள்ளிட்ட இந்தியாவின் 64 திட்டங்கள் மூலம் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் மாணவர்களை அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு அனுப்ப இருக்கின்றன. இந்தியாவின் கலாசாரம், வணிக சூழல் மற்றும் மக்களின் உணர்வுகள் பற்றி அறிய விரும்பும் இளம் ஆஸ்திரேலிய தலைமுறையினருக்கு நாங்கள் உதவி வருகிறோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த 1607 பேரை தவிர, மேலும் 6 இளங்கலை பட்டதாரி மாணவர்களும் புதிய கொழும்பு திட்ட ஊக்கத்தொகை பெற்று இந்தியா வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்க அரசு தீவிரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்க சீன அரசு தீவிரம் காட்டி வருகிறது.
2. தனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி
தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
3. பதவி உயர்வை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 1,000 பேர் ராஜினாமா : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தில் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 1,000 பேர் ராஜினாமா செய்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
4. பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 1,500 சுற்றுலா பயணிகள் மீட்பு
சிக்கிமில் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 1,500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
5. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது: விலை மேலும் குறைய வாய்ப்பு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது. இதனால் வெங்காயம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.