உலக செய்திகள்

மாலியில் தாக்குதல்: 50 பேர் பலி; ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு + "||" + IS claims responsibility for deadly Mali attacks on 50 soldiers

மாலியில் தாக்குதல்: 50 பேர் பலி; ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

மாலியில் தாக்குதல்:  50 பேர் பலி; ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
மாலியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பிரான்ஸ் ராணுவ வீரர் உள்பட 50 பேர் பலியான சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பமாக்கோ,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  நாசவேலைகளில் ஈடுபடும் அவர்களை ஒழித்துக்கட்ட முடியாமல் ராணுவம் திணறி வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டில் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் ராணுவ சாவடி ஒன்று செயல்பட்டு வந்தது. இது முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சாவடியை கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாதிகள் அதிரடியாக முற்றுகையிட்டு, துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் 49 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும், அங்கு அந்த நாட்டு அரசு கூடுதல் படைகளை அனுப்பி வைத்தது.  இதன்பின்பு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  இந்த தாக்குதலில் 20 வீரர்கள் தப்பி உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  இந்நிலையில், நேற்று நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வாகனம் ஒன்று சேதமடைந்தது.  இதில், பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர் ரோனன் பாயின்டியூ (வயது 24) என்பவர் கொல்லப்பட்டார்.

அந்த நாட்டில் இதுவரை இல்லாத வகையில் சமீபத்தில் நடந்துள்ள மிக பெரிய பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு நேற்றிரவு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

பிரான்ஸ் வீரர் மறைவுக்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் அஞ்சலி செலுத்தினார்.  பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் பிரான்ஸ் மற்றும் ஆப்பிரிக்க படைகள் ஒற்றுமையுடன் செயல்படும்படியும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. லஷ்கர்-இ-தொய்பா, தாவூத் இப்ராஹிமுடன் கைகோர்த்து இந்தியாவில் தாக்குதல்களை நடத்த திட்டம்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு லஷ்கர்-இ-தொய்பா ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித்திட்டமிட்டு உள்ளது.