தேசிய செய்திகள்

தாஜ்மகாலுக்குள் புகுந்த மலைப்பாம்பு சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் + "||" + 9-foot python visits Taj Mahal

தாஜ்மகாலுக்குள் புகுந்த மலைப்பாம்பு சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

தாஜ்மகாலுக்குள் புகுந்த மலைப்பாம்பு சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
தாஜ்மகாலுக்குள் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்ததால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி,

உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். மொகலாய மன்னன் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டியது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.  தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். 

இந்த நிலையில், 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு தாஜ்மகாலின் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்துள்ளது. முதலில் இதனை யாரும் பார்க்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் பாம்பைப் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த செய்தி காட்டுத் தீயாக பரவியதால் தாஜ்மாகாலுக்குள் இருந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அதிக பாம்புகள் வந்திருக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையில் அவர்களும், நாலாபுறம் சிதறி அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து பாம்பை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். பின்னர் ஒருவழியாக பாம்பு பிடிக்கப்பட்டது.

பாம்பு பிடிக்கப்பட்டு ஆய்வுக்காக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பரிசோதனைகள் முடிந்ததும், வனப்பகுதிக்குள் பாம்பு விடப்பட்டது.

தாஜ்மகாலை ஒட்டி பசுமையான புற்கள் காணப்படுகின்றன. அதில் உலாவுவதற்கு பாம்பு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.