தேசிய செய்திகள்

கல்லூரி தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்துவதில் அரசு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல் + "||" + Advice to follow government rules on jammer tool fitting in college exam centers

கல்லூரி தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்துவதில் அரசு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்

கல்லூரி தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்துவதில் அரசு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்
கல்லூரி தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்துவதில் அரசு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தேர்வுகளில் பல்வேறு வகையில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரேடியோ அலைகள் சார்ந்த கருவிகள் மூலம் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தேர்வுக்கூடங்களில் குறைந்த சக்தி கொண்ட ஜாமர் கருவி பொருத்த மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அனுமதி அளித்தது.


இதைத்தொடர்ந்து இந்த கருவிகளை தேர்வுக்கூடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், ஜாமர் கருவிகளை பொருத்துவதற்கு முன் அரசின் விதிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வும் தொடங்குவதற்கு ஜாமர் கருவியின் செயல்பாடு குறித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல சிறந்த ஜாமர் கருவி மாடலாக, ‘இ.சி-சி.ஆர்.ஜே-6பி5’ என்ற கருவியையும் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது.