தேசிய செய்திகள்

‘நீதிபதிகளை விமர்சிப்பது என்னை பாதிக்கிறது’ - சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி வேதனை + "||" + ‘Bothers me to see judges feel harassed on social media’, says chief justice-designate SA Bobde

‘நீதிபதிகளை விமர்சிப்பது என்னை பாதிக்கிறது’ - சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி வேதனை

‘நீதிபதிகளை விமர்சிப்பது என்னை பாதிக்கிறது’ - சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி வேதனை
சமூக ஊடகங்கள் மூலம் நீதிபதிகளை விமர்சிப்பது தன்னை பாதிப்பதாக சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 17-ந் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது நீதிபதிகளை சமூக ஊடகங்களில் விமர்சிப்பது குறித்து வேதனை தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பை விமர்சிப்பதற்கு பதிலாக நீதிபதிகளையே சமூக ஊடகங்களில் விமர்சிப்பது கோர்ட்டுகளின் செயல்பாட்டை பாதிக்கலாம். நீதிபதிகள் இவ்வாறு துன்புறுத்தப்படுவது ஒரு அளவுக்கு மேல் என்னையும் பாதிக்கிறது. யாரும் இதை விரும்பமாட்டார்கள். இதை புறந்தள்ளி செல்வதற்கு எல்லாரும் கடின உள்ளம் படைத்தவர்கள் அல்ல. நீதிபதிகளும் மனிதர்கள்தான்’ என்று தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பரவும் இதுபோன்ற கட்டுக்கடங்காத விமர்சனங்கள் மாபெரும் மோசடி மட்டுமின்றி, இதன் மூலம் நீதிபதிகளின் புகழுக்கு பங்கம் ஏற்படுவதாகவும் கூறிய நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தற்போதைய நிலையில் சுப்ரீம் கோர்ட்டால் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்
சாதி ரீதியாக தான் செய்த விமர்சனத்துக்கு, யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்.
2. அழகானவர் இல்லை என்று விமர்சனம்: பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல்?
அழகானவர் இல்லை என்று விமர்சனம் செய்த நடிகை பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல் விவகாரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
3. டிரம்ப் வருகை குறித்த காங்கிரசின் விமர்சனத்துக்கு பா.ஜனதா பதிலடி
டிரம்ப் வருகை குறித்த காங்கிரசின் விமர்சனத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
4. அதிபரை விமர்சிக்கும் ஆடியோ வெளியானது: உக்ரைன் பிரதமர் ராஜினாமா
அதிபரை விமர்சிக்கும் ஆடியோ வெளியானதை தொடர்ந்து உக்ரைன் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
5. தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்
இந்திய அணிக்குள் தொடக்க ஆட்டக்காரர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும், அவர்களை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டாம் என்று இந்திய கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.