தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: 32 விமானங்கள் திருப்பி விடப்பட்டன + "||" + Air pollution increase in Delhi: 32 aircraft diverted

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: 32 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: 32 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
டெல்லியில் காற்று மாசு காரணமாக நேற்று 32 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. காற்று மாசு விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுபொருட்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி கட்டுமான பணிகள், பட்டாசு வெடிப்பதன் காரணமாக காற்று மாசு அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.


தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை காற்று மாசு அபாய அளவை எட்டியது. இதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, பீகார் மாநிலங்களில் புகைமூட்டம் சூழ்ந்து இருப்பதை செயற்கைகோள் மூலம் நாசா நேற்று படம்பிடித்து, அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நாளை வரை மணிக்கு 20 முதல் 25 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஹா புயல் காரணமாக டெல்லி, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 7 மற்றும் 8-ந் தேதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று காலை காற்று மாசும், பனிமூட்டமும் அதிகரித்து இருந்தது. இதனால் டெல்லி விமான நிலையத்துக்கு வந்த 32 விமானங்கள் அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், மும்பை, லக்னோ நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னை, கோவா, பெங்களூரு, ஆமதாபாத்தில் இருந்து டெல்லி வந்த விமானங்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை குறைக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. காற்று மாசால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, டெல்லியில் வருகிற 8-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்த தகவலை மறுத்துள்ள துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, பள்ளி விடுமுறை குறித்து சமூக வலைத்தளங்களில் போலியான கடிதம் பரவி வருகிறது என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3. டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 'பிளாஸ்மா வங்கி' அமைக்கப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
4. டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 2,948 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. டெல்லியில் சீனர்களுக்கு தங்கும் விடுதிகளில் அனுமதி இல்லை -உரிமையாளர்கள் அறிவிப்பு
டெல்லியில் சீனர்களுக்கு தங்கும் விடுதிகளில் அனுமதி இல்லை என்று விடுதி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.