தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா - பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார் + "||" + International Indian Science Festival in Kolkata - Prime Minister Narendra Modi starting tomorrow

கொல்கத்தாவில் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா - பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

கொல்கத்தாவில் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா - பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
கொல்கத்தாவில் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
கொல்கத்தா,

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சாதனை மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நிபுணர்கள், விவசாயிகள், அறிவியலாளர்கள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடும் வகையிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் அரவணைத்து செல்லும் வகையிலும் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவினை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.


அந்த வகையில் 5-வது சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டர் மற்றும் கொல்கத்தா அறிவியல் நகரம் ஆகிய 2 இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.

இதனை பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இருந்தவாறு ‘காணொலி’ காட்சி மூலமாக தொடங்கிவைக்கிறார். விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், செயலாளர் ஆசுதோஷ் சர்மா உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இந்த அறிவியல் திருவிழாவில் பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு உள்பட 28 வகையான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் கொரோனா பரவி வரும் நிலையில் நர்சுகள் வேலையை விட்டு விட்டு, சொந்த ஊர்களுக்கு விரைவு: பின்னணி என்ன?
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொல்கத்தாவில் தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் வேலையை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு விரைந்தனர். இதனால் அந்த நகரம் பதற்றத்தின் பிடியில் உள்ளது.
2. கொல்கத்தாவில் ‘கொரோனா’விடம் தப்பிய இரண்டு குழந்தைகள் - குணமடைந்து வீடு திரும்பினர்
கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.
3. கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி
கொல்கத்தாவில் டிரம்ப் வருகைக்கு எதிராக இடதுசாரிகள் பேரணி நடத்தினர்.
4. கொல்கத்தா துறைமுகத்திற்கு சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை சூட்டினார் பிரதமர் மோடி
கொல்கத்தா துறைமுகம் இன்று முதல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி...!
கொல்கத்தாவில் உள்ள காப்பகம் ஒன்றுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.