மாநில செய்திகள்

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ் + "||" + Statue of Tiruvalluvar insulted Is severely reprehensible PMK founder Ramadoss

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தஞ்சாவூர் பகுதியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  இதற்கிடையில், தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு உரிய மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலை செய்தவர்கள்  தமிழுக்கு எதிரானவர்கள். இதற்கு காரணமானவர்கள் மீதும், தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.