தேசிய செய்திகள்

‘மஹா புயல்’ குஜராத், மகாராஷ்டிராவில் நாளை கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + Heavy rain in Gujarat, Maharashtra tomorrow - Indian Meteorological Department

‘மஹா புயல்’ குஜராத், மகாராஷ்டிராவில் நாளை கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்

‘மஹா புயல்’ குஜராத், மகாராஷ்டிராவில் நாளை கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்
‘மஹா புயல்’ காரணமாக நாளை குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

அரபிக் கடலின் மத்திய-கிழக்கு பகுதியில் ‘மஹா புயல்’ மையம் கொண்டுள்ளது.  இந்த புயல் காரணமாக வரும் 5 ஆம் தேதி(நாளை) குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்வதால் வரும் 6 மற்றும் 7 ஆம் தேதிளில் மழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு சுமார் 90 முதல் 100 கி.மீ வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் மத்திய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பரவலாக கனமழை; வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
2. சென்னை, கடலூர், நாமக்கல் பகுதிகளில் கனமழை
சென்னை, கடலூர் மற்றும் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது.
3. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது -சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
5. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.