தேசிய செய்திகள்

டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல்: உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி + "||" + Police-lawyers clash in Delhi: Why is Home Minister Amit Shah silent? - Question of Congress

டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல்: உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி

டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல்: உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல் சம்பவத்தில், உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் திஸ் ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் கடந்த 2-ந்தேதி வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்த ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வக்கீல்கள் படுகாயம் அடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து வக்கீல்களும், போலீசாரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த சம்பவம் தொடர்பாக மவுனம் சாதிப்பது ஏன்? என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.


இதுதொடர்பாக அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப் பாளர் ரன்தீப்சிங் சுஜ்வாலா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தை போலீசார் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத தரம் தாழ்ந்த செயலாக உள்ளது. தலைநகரில் வக்கீல்களும், போலீசாரும் மோதலில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தபோது உள்துறை அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? டெல்லியில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து அவர் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், டெல்லியில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து மக்களை யார் பாதுகாக்க போகிறார்கள்? எனக்கூறிய ரன்தீப்சிங் சுஜ்வாலா, இதுதான் பா.ஜனதா அரசு எங்களிடம் கூறிய புதிய இந்தியாவா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் மீது தீவைப்பு, சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார்
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் , கோர்ட்டுக்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி கடல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3. டெல்லியில் காற்றுமாசு மோசமான நிலையை நாளை அடையும் - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்
டெல்லியில் காற்றுமாசு மோசமான நிலையை நாளை அடையும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
4. டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவு
டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன்? பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்
விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரனை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி பிடிபட் டவர்கள் போலீசில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர்.