மாநில செய்திகள்

மிருதங்கம் கலாசாரத்தின் ஒரு அங்கம்; நூல் வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு + "||" + Mirudangam is a part of culture; Venkaiah Naidu talks at the book launch

மிருதங்கம் கலாசாரத்தின் ஒரு அங்கம்; நூல் வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு

மிருதங்கம் கலாசாரத்தின் ஒரு அங்கம்; நூல் வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
‘மிருதங்கம், கலாசாரத்தின் ஒரு அங்கம்’ என்று நூல் வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை, 

‘மிருதங்கத்தின் இசை சிறப்பு’ (மியூசிக்கல் எக்சலன்ஸ் ஆப் மிருதங்கம்) எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எல்.ஆர்.ஐ.) நேற்று நடந்தது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நூலை வெளியிட்டார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சி.எல்.ஆர்.ஐ. இயக்குனர் சந்தோஷ் கபூரியா, மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்ப மைய முன்னாள் செயலாளர் டி.ராமசாமி, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், கர்நாடக இசைக்கலைஞர் கீதா ராஜசேகர், மியூசிக் அகாடமி தலைவர் ‘தி இந்து’ என்.முரளி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

மிருதங்கத்தில் இருந்து வெளிப்படும் அருமையான இசைக்கு மேற்கத்திய இசைக்கருவிகள் எதுவும் ஈடாகாது. நமது ஆன்மிக இலக்கியங்களிலும் சிவபெருமானின் தாண்டவ நடனத்துக்கு மிருதங்கம் வாசிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. மிருதங்கம் என்பது நமது மதம், வரலாறு மற்றும் கலாசாரத்தின் ஒரு அங்கமாகும்.

இந்தியாவின் இசையில் அற்புதமான ஆழம், பரவலான ஞானம், ஈர்ப்புள்ள பன்முகத்தன்மை உள்ளது. நமது பழமையான இசை முறைமைகளின் ஒவ்வொரு பாடங்களும் பாதுகாக்கப்பட்டு, கற்பிக்கப்பட வேண்டும். ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் என்ற நமது லட்சியத்தை அடைவதில் கலாசாரம் மற்றும் பழமையான இசையின் பன்முகத்தன்மையை கூட்டாக செழுமைப்படுத்த வேண்டும்.

மேற்கத்திய இசைக் கருவிகளின் நவீன அறிவியலைப் பயன்படுத்தி கணிசமான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்திய இசைக் கருவிகளில் அப்படி கிடையாது. தொடர்புகள் விடுபட்டுப் போயிருக்கின்றன. ஆன்மிகத்தின் அடிப்படையில் நமது அறிவியல் கட்டமைக்கப்பட்டது. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பவை என்று நமது ஆன்மிக குருமார்கள் காலம் காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர்.

கலை, இசை, மருத்துவம் மற்றும் பல விஷயங்கள் அறிவார்ந்த விஷயங்களின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்டுள்ளன. சிந்தனை வளம் மிக்க நமது தலைவர்கள் விரும்பிய வகையில், அனைத்து அறிவார்ந்த விஷயங்களையும் தொடர்புபடுத்தும் கோட்பாட்டை நோக்கி, உலகின் எதிர்காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

இந்துஸ்தானி இசைக்கு தபேலா எப்படி முக்கிய வாத்தியமாக இருக்கிறதோ, அதேபோல் கர்நாடக இசைக்கு மிருதங்கம் அதி முக்கியமான இசைக்கருவி ஆகும். கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஒன்றுபட்ட கூட்டுமுயற்சியே நூலாக வெளியாகி உள்ளது. கர்நாடக இசை கலாசாரத்துக்கு இந்த நூல் கூடுதல் மதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

1. இன்று புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டம் வழங்குகிறார்
புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடக் கிறது. மாணவ, மாணவிகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டங்களை வழங்குகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...