மாநில செய்திகள்

ரூ.25 கோடி செலவில் தடுப்பணை, கட்டிடங்கள்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் + "||" + Prevention dam, buildings at a cost of Rs 25 crore; The inauguration of the chief Minister, Edappadi Palanisamy

ரூ.25 கோடி செலவில் தடுப்பணை, கட்டிடங்கள்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ரூ.25 கோடி செலவில் தடுப்பணை, கட்டிடங்கள்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணைகள் மற்றும் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை, 

தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டு; கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் கிராமம், அரசம்பட்டி அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், 6 கூட்டு குடிநீர்த்திட்ட கிணறுகள் மூலம் 224 கிராம மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்கிடும் வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை;

போச்சம்பள்ளி தாலுகா, பெண்டறஹள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், பெண்டறஹள்ளி, காசானூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள 34 பாசன கிணறுகளின் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை; திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே, மேல் நகர் ஊராட்சி பகுதியில் உள்ள 97 ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகிய முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் அமைந்துள்ள அரசு ஆய்வு மாளிகையின் அருகில் கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலக கட்டிடம் என மொத்தம் 25 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீர்வள ஆதாரத் துறை மற்றும் பொதுப்பணித்துறைகளின் முடிவுற்ற திட்டப்பணிகளான தடுப்பணைகள் மற்றும் கட்டிடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட நடூர் கிராமத்தில், வீடுகள் இடிந்து மிகப்பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
2. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு ‘தில்’ இருக்கிறது; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு தில் இருக்கிறது என்றும், தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
3. கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிக அளவில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி: பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி
தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
5. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க ரூ.2,363 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு உத்தரவு
அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்காக ரூ.2,363 கோடி தொகையை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.