தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேச அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம் + "||" + Andhra Pradesh set to introduce English medium in govt schools

ஆந்திர பிரதேச அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம்

ஆந்திர பிரதேச அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம்
ஆந்திர பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திர பிரதேச அரசாங்கத்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகள், மண்டல் பரிஷத் பள்ளிகள் மற்றும் ஜில்லா பரிஷத் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையும், அதற்கடுத்ததாக 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கும் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வி ஆணையத்திற்கு ஆந்திர அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பள்ளிகளில் தெலுங்கு அல்லது உருது மொழிப்பாடம் கட்டாயப்பாடமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் நடத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும், ஆங்கில புலமைக்கான தேர்வுகளின் அடிப்படையில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 12 நேரமாக கசியும் வாயு:கிராம மக்கள் பீதி- வெளியேற்றம்
ஆந்திராவில் 12 நேரமாக வாயு கசிந்து வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். அவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
2. ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்
ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம்: படமாகும் செம்மர கடத்தல்
ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.
4. ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைப்பு
ஆந்திராவில் தலைநகரங்களை மாற்றும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.
5. ஆந்திராவில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை -புதிய மசோதா நிறைவேற்றம்
பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கும் புதிய மசோதா ஆந்திரா சட்டசபையில் நிறைவேறியது.