மாநில செய்திகள்

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் அர்ஜுன் சம்பத் + "||" + Arjun Sampath wore a saffron towel to Thiruvalluvar statue

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் அர்ஜுன் சம்பத்

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் அர்ஜுன் சம்பத்
தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு அணிவித்தார்.
தஞ்சாவூர்,

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் உருவப்படம் பதிவிடப்பட்டிருந்தது. காவி உடையுடன் நெற்றியில் திருநீறு அணிந்து கழுத்தில் ருத்ராட்சத்துடன் இருப்பது போன்று பதிவிடப்பட்டிருந்த அந்த புகைபடத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

திருவள்ளுவர் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்றும் அவருக்கு மதஅடையாளம் கொடுக்க முயற்சி செய்வது கடும் கண்டனத்திற்குரியது  என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு அணிவித்தார்.

தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனையும் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது -விஜயகாந்த்
திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2. தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பா.ஜ.க.வினர் பாலாபிஷேகம்
தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பா.ஜ.க.வினர் இன்று பாலாபிஷேகம் செய்தனர்.
3. தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு; மாணவர்கள்-அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. இதை கண்டித்து மாணவ, மாணவிகள் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4. திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5. திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் -மு.க. ஸ்டாலின்
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.