உலக செய்திகள்

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்; 10 பேர் பலி + "||" + 10 killed in Houthi missile attack on Yemen's Mocha

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்; 10 பேர் பலி

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்; 10 பேர் பலி
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஏடன்,

ஏமன் நாட்டின் கடலோர நகரான மோச்சா நகரில் அரசு ஆதரவு ராணுவ தளங்கள் அமைந்துள்ளன.  அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மோச்சா நகரில் உள்ள வெவ்வேறு ராணுவ தளங்கள் மீது 4 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  இவற்றில் 2 ஏவுகணைகள் உணவு பாதுகாப்பு குடோன்கள் மீது விழுந்தன.

இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.  பலர் காயமடைந்தனர்.

ஜெயன்ட்ஸ் பிரிகேடியர்கள் என்ற அரசு ஆதரவு படை பிரிவின் ராணுவ தளம் ஒன்றின் மீதும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு வந்த ஆளில்லா விமானங்கள் குடியிருப்புகள் மீது மோதியுள்ளன.  இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் போர் பயிற்சியின் போது விபரீதம்: கப்பலில் ஏவுகணை தாக்கி 19 வீரர்கள் பலி
ஈரானில் போர் பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக கப்பலில் ஏவுகணை தாக்கியதில் 19 வீரர்கள் பலியாகினர்.