தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் நக்சல்களுடன் மோதல்; சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு + "||" + Chhattisgarh: A CRPF jawan has lost his life in an encounter with Naxals

சத்தீஷ்காரில் நக்சல்களுடன் மோதல்; சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு

சத்தீஷ்காரில் நக்சல்களுடன் மோதல்; சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு
சத்தீஷ்காரில் நக்சல்களுடன் ஏற்பட்ட மோதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
பிஜாப்பூர்,

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் பல்வேறு பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  கடந்த வருடம் இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு பதிவை புறக்கணிக்கும்படி கூறி, போஸ்டர்களை ஒட்டியும், பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தும் பரபரப்பினை ஏற்படுத்தினர்.

எனினும், தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் நகரில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (சி.ஆர்.பி.எப்.) தகவல் கிடைத்தது.  இதனை அடுத்து அங்கு சென்ற சி.ஆர்.பி.எப். வீரர்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் ஏற்பட்ட சண்டையில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நக்சலைட்டுகள் அட்டூழியம்: சத்தீஷ்காரில் டீசல் டேங்கர் தகர்ப்பு; 3 பேர் பலி
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளால் டீசல் டேங்கர் ஒன்று தகர்க்கப்பட்டதில் 3 பேர் பலியாகினர்.
2. போலீசாருடன் நக்சலைட்டுகள் துப்பாக்கி சண்டை : 1 மணி நேரம் நீடித்ததால் பரபரப்பு
கட்சிரோலியில் நேற்று போலீசார் மற்றும் நக்சலைட்டுகள் இடையே 1 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.