உலக செய்திகள்

சிலி நாட்டில் போராட்டம்; அர்ஜென்டினா மக்கள் ஆதரவு + "||" + Rally organised in Argentina in support of Chile protest

சிலி நாட்டில் போராட்டம்; அர்ஜென்டினா மக்கள் ஆதரவு

சிலி நாட்டில் போராட்டம்; அர்ஜென்டினா மக்கள் ஆதரவு
சிலி நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அர்ஜென்டினாவில் மக்கள் பேரணி நடத்தினர்.
சான்டியாகோ,

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் கடந்த சில மாதங்களாக சுகாதாரம், கல்வி மற்றும் பொது சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பேருந்து, மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.

எரிபொருட்கள் விலை உயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது. ஆனால் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்தார். 

இருப்பினும் நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சீர் செய்யவும், அதிபர் செபாஸ்டியன் பினெரா பதவி விலக வலியுறுத்தியும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சிலி நாட்டு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அர்ஜென்டினாவில் பேரணி நடத்தப்பட்டது. அர்ஜென்டினாவின் பியுனெஸ் அயர்ஸ் நகரின் மைய பகுதியில் பதாகைகளுடன் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசை வாத்தியங்களை இசைத்தபடி சாலைகளில் பேரணியாக சென்று சிலி நாட்டு மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இலவச வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து சர்க்கஸ் கலைஞர்கள் கருப்பு கொடி கட்டி போராட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
2. சேலத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்க எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
சேலத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
3. ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் - 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தகவல்
ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தெரிவித்துள்ளது.
4. சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. தலைமை ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
பாலக்கோடு அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் முத்துக்கிரு‌‌ஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.