தேசிய செய்திகள்

கோவை சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் + "||" + Kovai girl2 murder The guilty verdict is confirmed

கோவை சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்

கோவை சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்
கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
புதுடெல்லி,

கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ஒருவரின் 10 வயது மகள், 7 வயது மகன் ஆகியோர் 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி பள்ளிக்கு சென்றபோது கார் டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோரால் கடத்தி கொல்லப்பட்டனர். சிறுமியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த இரட்டை கொலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகன்ராஜ் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது நடைபெற்ற என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இரட்டைத் தூக்கு மற்றும் 3 ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டில்  சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

இதை தொடர்ந்து  மனோகரன் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் மனோகரனுக்கு மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்  உறுதி செய்து உள்ளது. மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடி  செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.