தேசிய செய்திகள்

தங்கள் எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக சூழ்ச்சி -சிவசேனா குற்றச்சாட்டு + "||" + Maharashtra: MLA to manipulate the BJP Shiva Sena charge

தங்கள் எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக சூழ்ச்சி -சிவசேனா குற்றச்சாட்டு

தங்கள் எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக சூழ்ச்சி -சிவசேனா குற்றச்சாட்டு
மராட்டியத்தில் ஆட்சி அமைக்க தங்கள் எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக சூழ்ச்சி செய்வதாக சிவசேனா குற்றஞ்சாட்டி உள்ளது.
மும்பை

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதல் காரணமாக புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இரு கட்சிகளின் தொடர் பிடிவாதம் காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் ஆன போதிலும், மராட்டியத்தில் இன்னும் புதிய அரசு அமையவில்லை.

சிவசேனா இறங்கி வருவதாக தெரியவில்லை தனது பிடிவாதத்தில் குறியாக உள்ளது.

சிவசேனா, தனது கட்சி பத்திரிகையான 'சாம்னா'வின்  தலையங்கத்தில், பாரதீய ஜனதா அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை வேட்டையாடி வருவதாக மறைமுகமாக குற்றம் சாட்டியது. ஆட்சியில் பங்கு என்ற  சிவசேனாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி  உள்ளது.

சிவசேனா தனது எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்து இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், எங்கள் எம்.எல்.ஏக்கள் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார்கள், கட்சிக்கு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் முதலில் தங்கள் எம்.எல்.ஏ.க்களைப் பற்றி கவலைப்பட வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் பட்னாவிஸ் தான் முதல்வர்; சிவசேனா ஆதரவை விரைவில் பெறுவோம்- நிதின் கட்காரி
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தலைமையில் மராட்டியத்தில் பாஜக-சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அதற்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
2. சிவசேனா உடையும் 25 எம்.எம்.எல்.ஏக்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடனும் தொடர்பில் உள்ளனர் -சுயேட்சை எம்.எல்.ஏ.
சிவசேனா உடையும் என்றும் 25 எம்.எம்.எல்.ஏக்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடனும் தொடர்பில் உள்ளனர் என்றும் சுயேட்சை எம்எல்ஏ கூறியுள்ளார்.
3. ”ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம்” -சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது
ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என கூறும் சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது.
4. பாஜகவுடன் பேரம் பேசுவதற்காக சிவசேனா எங்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் - சரத்பவார்
பாஜகவுடன் பேரம் பேசுவதற்காக சிவசேனா எங்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
5. ஆட்சி அமைவதில் இழுபறி: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியா? - பா.ஜனதா மந்திரி தகவலால் பரபரப்பு
மராட்டியத்தில் வருகிற 7-ந்தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்காவிட்டால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவரும், நிதி மந்திரியுமான சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.